சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுக்களை மிரட்டும் நிதி நிறுவனங்கள்

Added : மே 22, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில், மகளிர் சுயஉதவிக் குழுவை சேர்ந்தபெண்களை, ஊரடங்கு நேரத்தில் உடனடியாக பணம் கட்ட சொல்லிநிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தபெண்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் பணம் பெற்று தவணை முறையில் திரும்ப செலுத்தி வருகின்றனர்.இதில், ரூ.10 ஆயிரம்,ரூ.40 ஆயிரம் என அவரவரின் தேவைக்கு ஏற்பட தொகையை பெற்று,வாரம் இரண்டு தவணைகளாக செலுத்தினர்.

தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்ல முடியாத நிலையில் தவணை தொகையை செலுத்த முடியவில்லை.ஆனால், நிதிநிறுவன ஊழியர்கள் உடனடியாக பணத்தை கட்டச் சொல்லி பணம்வாங்கியவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டுவதாக மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் டி.எஸ்.பி., அருணிடம்புகார் அளித்தனர்.

அதில், தாங்கள் இதுவரை முறையாகதவணை செலுத்தி வந்ததாகவும், ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், தவணைத் தொகையை கட்ட முடியவில்லை. அவகாசம் தான் கேட்கிறோம், எனத் தெரிவித்துள்ளனர்.

டி.எஸ்.பி., அருண் கூறுகையில், மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள், ஊரடங்கு நேரத்தில் நிதி நிறுவனங்கள் உடனடியாக பணம் கட்ட சொல்வதாக புகார் அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X