தமிழ்நாடு

அப்பாடா.. : 48 மண்டலங்களில் புதிய பாதிப்பு இல்லை: கொரோனாவில் மீளும் மதுரை மாவட்டம்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement
அப்பாடா.. : 48 மண்டலங்களில் புதிய பாதிப்பு இல்லை:  கொரோனாவில் மீளும் மதுரை மாவட்டம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைகிறது. 82 நோய் கட்டுப்பாடு மண்டலங்களில் 48 பகுதிகள் கொரோனாவிடம் இருந்து மீண்டுள்ளன.

மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு, இறப்பு மதுரை நகரில் நேர்ந்தது. பின்னர் படிப்படியாக பரவி நேற்றோடு 192 ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது. இதுவரை நகரில் 97 பேர், புறநகரில்
95 பேரை கொரோனா தாக்கியுள்ளது. நகரில் இருவர் இறந்தனர். கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகள் நோய் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. நகரில் 53,
புறநகரில் 29 என மொத்தம் 82 கட்டுப்பாடு மண்டலங்கள் கண்டறியப் பட்டன. இரு வாரங்களாக உள்ளூரில் புதிய பாதிப்புகண்டுபிடிக்கப்படுவது குறைந்து விட்டது.வெளியூர், வெளிமாநிலங்களில்இருந்துதிரும்புவோர் தான் பெரும்பாலும் பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கின்றனர்.

குறிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து வருவோரில் பலரும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவதால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலுக்குவாய்ப்பு இல்லை.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உள்ளூரில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. 82 கொரோனா கட்டுப்பாடு மண்டலங்களில் 48 மண்டலங்களில் கடைசி 28 நாட்களாக புதிய பாதிப்பு இல்லை. எஞ்சிய 34 மண்டலங்களில் 25க்கும் மேற்பட்ட மண்டலங்களில் 10 நாட்களாக பாதிப்பில்லை. வெளியூரில் இருந்து வருவோரிடம் மட்டுமே கொரோனா கண்டறியப்படுகிறது. உள்ளூரிலேயே பாதிப்போரின் எண்ணிக்கை சொற்பமாகி விட்டது' என்றார்.


கொரோனா பாதிப்பு விவரம்



பகுதி சிகிச்சை பெறுவோர் மீண்டவர்கள் இறப்பு மொத்த பாதிப்பு
மாநகராட்சி பகுதி 24 71 2 97புறநகர் 54 41 0 95
மொத்தம் 78 112 2 192

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X