பேஸ்புக் நண்பர்கள் கவனம் எச்சரிக்கும் போலீஸ் கமிஷனர் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேஸ்புக் நண்பர்கள் கவனம் எச்சரிக்கும் போலீஸ் கமிஷனர்

Added : மே 22, 2020
Share
மதுரை, தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவக்கப்பட்டது குறித்து விசாரித்து வரும் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், பேஸ்புக் நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.கமிஷனர் பெயரில் அமெரிக்காவில் இருந்து போலியாக பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து அதில் தொடர்ந்து கருத்துகள் பரிமாறப்பட்டு வந்தன. இதையறிந்த கமிஷனர், போலி கணக்கை

மதுரை, தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவக்கப்பட்டது குறித்து விசாரித்து வரும் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், பேஸ்புக் நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.கமிஷனர் பெயரில் அமெரிக்காவில் இருந்து போலியாக பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து அதில் தொடர்ந்து கருத்துகள் பரிமாறப்பட்டு வந்தன. இதையறிந்த கமிஷனர், போலி கணக்கை முடக்கினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: மோசடிக்காரர்கள் நமது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவக்குவதை தடுக்க 'பாஸ்வேர்டு' மட்டும் மாற்றினால் போதாது. நமது போட்டோ வேறு கணக்கில் உள்ளதா எனவும் பார்க்க வேண்டும்.அந்த போலி கணக்கில் இருந்து உங்களுக்கு 'பிரெண்ட் ரிக்வெஸ்ட்' வந்தாலோ, மெசஞ்சரில் தொடர்பு கொண்டாலோ சுதாரிக்க வேண்டும். நீங்கள் கவனக்குறைவாக 'கன்பார்ம்' கொடுத்துவிட்டால், அவர்கள் விரும்பும் படங்கள், தவறான விஷயங்களை உங்கள் பெயரில் பதிவேற்றி விடுவார்கள், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X