பொது செய்தி

தமிழ்நாடு

குறுந்தொழில்களுக்கு உடனடி உதவி கேட்கிறது 'டேக்ட்' அமைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:வாடகை கட்டடத்தில் தொழில் நடத்தி வரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு, தனி நிதி ஒதுக்க 'டேக்ட்' வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க(டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் அறிக்கை:கோவையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறுந்தொழில் செய்து வருகின்றனர். மூன்று மாதங்களாக தொழில் நடைபெறாததால், வாடகை தர முடியவில்லை.மூலப்பொருட்களும் வெளி மாநிலங்களில் இருந்து கிடைக்காததால், உள்ளூர் மார்கெட்டில், 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.எனவே, மத்திய, மாநில அரசுகள் குறுந்தொழில்களை பாதுகாக்க உடனடியாக உதவ வேண்டும். நலிந்த நிலையில், வாடகை கட்டடத்தில் தொழில் நடத்தி வரும், குறுந்தொழில் முனைவோர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தனி நிதி ஒதுக்க வேண்டும்.ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும், ஒரு லட்சம் ருபாய் மானியத்துடன், 6 சதவீதம் வட்டியில், ஒன்று முதல், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும்.கடனை திரும்ப செலுத்த, ஓராண்டு கால அவகாசம் தர வேண்டும். மூன்று மாதங்களுக்கான மின் கட்டணத்தை, முழுமையாக அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X