​70 சதவீத உதிரி பாகங்களை அரசே கொள்முதல் செய்யணும்: காட்மா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

​70 சதவீத உதிரி பாகங்களை அரசே கொள்முதல் செய்யணும்: காட்மா

Added : மே 22, 2020
Share
கோவை:குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 70 சதவீத உதிரி பாகங்களை கொள்முதல் செய்ய, 'காட்மா' வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தின்(காட்மா) செயற்குழு கூட்டம், தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கடன் அறிவிப்புகள், தொழில் முனைவோர்களுக்கு

கோவை:குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 70 சதவீத உதிரி பாகங்களை கொள்முதல் செய்ய, 'காட்மா' வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தின்(காட்மா) செயற்குழு கூட்டம், தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கடன் அறிவிப்புகள், தொழில் முனைவோர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதை கண்காணிக்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாதம்தோறும்குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.அறிவிக்கப்பட்டுள்ள கடன்களை, ஆறு சதவீத வட்டி விகிதத்தில் வழங்குவதுடன், ஆறுமாதங்களுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 70 சதவீத உதிரி பாகங்களை, அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X