தமிழ்நாடு

விமான பயண கட்டணம்: திருப்பி தர வலியுறுத்தல்

Added : மே 22, 2020
Share
Advertisement

மதுரை 'ரத்தான பயண கட்டணத்தை பணமாக திருப்பி தர விமான நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்' என மதுரை டிராவல் கிளப் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.இதுகுறித்து அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய்யிடம் கிளப் நிர்வாகிகள் முஸ்தபா, ரவீந்திரன், ரிஷ்வந்த், செந்தில்நாதன், விஸ்வநாதன், அனு அபிரகாம் மனு அளித்தனர்.அவர்கள் கூறியதாவது: பெரும்பாலான பயணிகள் முகவர்கள் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். விமானங்கள் ரத்தான நிலையில், பயண கட்டணத்தை திருப்பி தர விமான நிறுவனங்கள் மறுத்து விட்டன.சில நிறுவனங்கள் 11 மாதங்களுக்கு செல்லும்படியாகும் கிரெடிட் நோட்டை வெளியிட்டுள்ளனர். சில நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு செல்லும்படியாகும் வவுச்சர்களை வெளியிட்டுள்ளன. இவற்றை பயணிகள் ஏற்க மறுக்கின்றனர். இதில் பயணிகளுக்கும், முகவர்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விமான டிக்கெட்டுகளை பணமாக திருப்பி தர விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். சுற்றுலா தொழில் நடத்த கடனுதவி வழங்குவதுடன், குறுந்தொழில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இத்தொழிலுக்கு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X