குழாய் பதிக்க மரம் அழிப்பு: அன்னூர் விவசாயிகள் புகார்

Added : மே 22, 2020
Share
Advertisement
 குழாய் பதிக்க மரம் அழிப்பு: அன்னூர் விவசாயிகள் புகார்

அன்னூர்:திருப்பூர், நான்காம் குடிநீர் திட்டத்தில், குழாய் பதிக்க, 50க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் வெட்டப்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு, தினமும், 20 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும், நான்காம் குடிநீர் திட்ட பணிகள் நடக்கிறது. இப்பணிக்காக, குருக்கிளையம்பாளையத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் வழியில், 50க்கும் மேற்பட்ட மரங்களில், பாதி அளவு கிளைகள் வெட்டப்பட்டு உள்ளதாகவும், சிறிய மரங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், சாலையூர் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'குழாய் பதிப்பை, மூன்று அடிக்கு ரோட்டின் உள்புறம் நகர்த்தினால், மரங்களையும், கிளைகளையும், வெட்டி அகற்றத் தேவையில்லை. ஆனால் மண் பாதையில், குழிதோண்டி குழாய் பதிப்பதால், மரங்கள், மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன. வறட்சியை தாங்கி நிற்கும் மரங்களை சேதப்படுத்தாமல், குழாய் பதிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X