சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி  ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் 

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:ஜூன் 1ம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க, அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, எம்.பி., நடராஜன் தலைமையில், கோவை கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இது குறித்து, எம்.பி.,நடராஜன் கூறியதாவது:ஊரடங்கு காரணமாக ஆட்டோக்களை, இயக்க முடியாமல் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நலவாரியம் வாயிலாக, அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். வங்கி கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, ரூ.5000 வீதம் நிவாரணம் வழங்குவதுடன், ஜூன் 1ம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்கவும், அரசு அனுமதிக்க வேண்டும்.அவசர தேவைகளுக்காக இயக்கப்பட்ட, ஆட்டோக்களுக்கு போலீசார் அதிக அபராதம் விதித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகனிடம், மனுவை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், அனைத்து ஆட்டோ கூட்டுக்கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X