சின்னவெங்காயம் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்னவெங்காயம் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

Added : மே 22, 2020
Share

கம்பம்:கட்டுபடியான விலை கிடப்பதால் கம்பம் பள்ளத்தாக்கில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

காய்கறி பயிர்களில் முக்கிய இடம் பிடிப்பது சின்னவெங்காயமாகும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் தன்மையால் கொரோனா ஊரடங்கில் நல்ல கிராக்கி ஏற்பட்டது. ஏக்கருக்கு 4 முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். நடவு செய்த 90 நாட்களில் பலன் எடுக்கலாம். ஏக்கருக்கு விதை காய் 400 கிலோ தேவைப்படும்.

மழை, பனிக்காலங்களில் மகசூல் குறையும். எனவே அக்டோபர் முதல் ஜனவரி வரை காய் வரத்து இருக்காது. மார்ச் முதல் செப்டம்பர் வரை வெங்காய வரத்து, நல்ல விலை கிடைக்கும். தற்போது சின்னவெங்காயம் கிலோ ரூ. 40 வரை விற்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி, ஆங்கூர்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சின்னவெங்காயம் சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X