அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதா? ; டிரம்ப் ஆதரவாளர்களுக்கு ஜோ பிடன் எச்சரிக்கை

Added : மே 22, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : ''டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள், எதிர்காலத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் எச்சரித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ளது. அதிக முறைகேடுஇதில், குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டி யிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஒபாமா அதிபராகவும், ஜோ பிடன் துணை அதிபராகவும் பதவி வகித்த காலத்தில், அதிக முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாக, டிரம்பும், அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். இதற்கிடையே, கொலம்பிய பல்கலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, ஜோ பிடேன் பேசியதவாது:டிரம்பும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இவர்களுக்கு பதில் அளித்து, என் மரியாதையை குறைக்க விரும்பவில்லை. கடும் விளைவுஅவர்கள் சாக்கடையில் விழுந்து விட்டனர் என்பதற்காக, நானும் சாக்கடையில் விழ விரும்பவில்லை. சமீபகாலமாக, டிரம்பும், அவரது ஆதரவாளர்களும், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்; இது, ஜனநாயக நாடு என்பதை மறந்து, தங்கள் விருப்பப்படி செயல்படுகின்றனர்.டிரம்பை விமர்சிப்பவர்கள் மீது, அதிகாரத்தை ஏவுகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள், எதிர்காலத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அவர் பேசினார்.

டிரம்ப் பாய்ச்சல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவை, வழக்கமான தேர்தலாக இல்லாமல், 'இ - மெயில்' வாயிலாக ஓட்டுச் செலுத்தும் வகையில் நடத்தப் போவதாக மிச்சிகன், நெவாடா ஆகிய மாகாணங்கள் முடிவு செய்துள்ளன; இது ஏமாற்று வேலை. தேர்தலில் மோசடி செய்வதற்காக இதுபோன்ற முடிவை அந்த மாகாண அரசுகள் எடுத்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டால், அந்த மாகாணங்களுக்கு ஒதுக்கும் நிதியை அதிரடியாக நிறுத்தி வைப்போம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X