பொது செய்தி

தமிழ்நாடு

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி

Added : மே 22, 2020
Share
Advertisement

சென்னை : சின்னத்திரைக்கான படப்பிடிப்புகளை நடத்த, பல்வேறு நிபந்தனைகளுடன், முதல்வர், இ.பி.எஸ்., அனுமதி அளித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், சின்னத்திரை படப்பிடிப்பை, மீண்டும் துவக்க அனுமதி அளிக்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்த முதல்வர், சில நிபந்தனைகளுடன், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளார். நிபந்தனைகள் விபரம்: சுற்றுச்சுவர் உள்ள வீடுகள் அல்லது அரங்கிற்குள் மட்டுமே, படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு, இது பொருந்தாது; பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது பொது இடங்களில், படப்பிடிப்பு நடத்தக்கூடாது. ஊரக பகுதிகளில், தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பொது இடங்களில், படப்பிடிப்பு நடத்த தடை இல்லை படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டை, படப்பிடிப்பிற்கு முன், பின், கிருமி நாசினியால், சுத்தம் செய்ய வேண்டும் நடிகர்கள், நடிகையர் தவிர, மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும், கண்டிப் பாக முகக் கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர், நடிகையர் படப்பிடிப்பு இடைவேளையின் போது, தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்

 படப்பிடிப்பில், 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. குழுவினர் அனைவரும், அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினியால், கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் படப்பிடிப்பு வளாகத்திற்குள் வரும் வாகனங்கள், போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், அனைத்து சாதனங்களும், கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும் சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்போரை, படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது; அவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்

 சென்னையில் படப்பிடிப்பு நடத்த, மாநகராட்சி கமிஷனரிடமும், பிற மாவட்டங்களில், படப்பிடிப்பு நடத்த, மாவட்ட கலெக்டர்களிடமும், முன் அனுமதி பெற வேண்டும் மத்திய, மாநில அரசுகள், அவ்வப்போது விதிக்கும், அனைத்து கட்டுப்பாடுகளையும், தவறாமல் பின்பற்ற வேண்டும். நிபந்தனைகள் தவறாமல் கடைப்பிடிக்கப்படுவதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அரசு அறிவித்துள்ளது.

விதிமுறை தளர்த்தப்படுமா? ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்வோரை, 14 நாட்கள் அவர்களின் வீடுகளில், தனிமைப்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.சின்னத்திரை படப்பிடிப்பிற்காக, மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவரா அல்லது படப்பிடிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படுவரா; அவர்களுக்கு மட்டும் தளர்வு வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X