பொது செய்தி

தமிழ்நாடு

எதையும் தொடாமல் கை கழுவலாம்: குடிநீர் பணியாளரின் அபார தயாரிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement
 எதையும் தொடாமல் கை கழுவலாம்: குடிநீர் பணியாளரின் அபார தயாரிப்பு

பெ.நா.பாளையம்:பிளிச்சி ஊராட்சியில், குடிநீர் பணியாளர் வடிவமைத்த, சானிடைசர் இயந்திரம் துாய்மை பணியாளர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த ஊராட்சியில் பணியாற்றும் குடிநீர் பணியாளர் முருகேசன், காலில் அழுத்தினால், சானிடைசர் வரும் வகையில் இயந்திரம் ஒன்றை, தனது சொந்த செலவில் வடிவமைத்துள்ளார்.முருகேசன் கூறுகையில், ''இந்த இயந்திரத்தில், கை கழுவ, கைகளால் எதையும் தொட வேண்டியதில்லை. ஊராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், சுகாதார பணியாளர்கள், குடிநீர் பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று பாதிக்காமல் இருக்க, இந்த இயந்திரம் உதவும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X