தேனி:கொரோனா ஊரடங்கால் தமிழக- கேரள மாநில எல்லைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவிலிருந்து தேவாரம் சாக்குலுாத்து மெட்டு வனப்பாதை வழியாக தினமும் ஏராளமானோர் நடந்து வருகின்றனர். வனத்துறை கண்காணிப்பு குறைவால் மருத்துவப்பரிசோதனையின்றி தேனி மாவட்டத்திற்குள் வெளிமாவட்ட தொழிலாளர்கள் வருவது அதிகரித்துள்ளது. இவர்களால் வைரஸ் தொற்று பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தேவாரம் சாக்குலுாத்து, குதிரைபாஞ்சான் வனப்பாதையில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு சில நாட்களுக்கு முன் விலக்கி கொள்ளப்பட்டது. வனத்துறையினரும் கண்டு கொள்ளாததால் கேரளாவிலிருந்து தினமும் ஆட்கள் வனப்பாதை வழியாக இறங்கி வருகின்றனர்.
இரு நாட்களுக்கு முன்ஆட்கொல்லி ஒற்றை யானை உலவும்வனப்பாதையில், நாமக்கல் தொழிலாளர்கள் நடந்து வந்தனர். கொரோனா வேகமாக பரவும் இச்சூழ்நிலையில் இதில் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'பணியாளர்கள் பற்றாக்குறையால் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE