சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாடாபாத் பகுதியில் அலறிய வங்கி அலாரம்

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:அதிகாலையில் வங்கியின் அலாரம் திடீரென ஒலித்ததால், கோவை டாடாபாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை டாடாபாத் பகுதியில், பேங்க் ஆப் இந்தியாவின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை, வங்கி ஊழியர்கள் வழக்கம் போல், வங்கியை பூட்டி விட்டு சென்றனர்.நேற்று அதிகாலை வங்கியில், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள அலாரம் திடீரென ஒலித்தது. செக்யூரிட்டி அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினரும் சத்தம் கேட்டு வங்கி முன்பு திரண்டனர். வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காட்டூர் போலீசார், அலாரம் ஒலித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதிகாரிகள், போலீசார் வங்கியை திறந்து, சோதனையிட்டனர்.யாரும் வங்கிக்குள் இல்லை. பின்னர் அலாரம் ஒலித்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காரணம் தெரியாததால், அதிகாரிகள் வங்கியை பூட்டி விட்டு புறப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X