அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்துவது, புதிய சவாலாக உருவெடுத்துள்ளது ;அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் ஒரே நாளில், 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால், கொரோனாவை கட்டுப்படுத்துவது, புதிய சவாலாக உருவெடுத்துள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், நேற்று மட்டும், 12 ஆயிரத்து, 464 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 776
கொரோனாவை கட்டுப்படுத்துவது, புதிய சவாலாக உருவெடுத்துள்ளது ;அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : ''தமிழகத்தில் ஒரே நாளில், 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால், கொரோனாவை கட்டுப்படுத்துவது, புதிய சவாலாக உருவெடுத்துள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், நேற்று மட்டும், 12 ஆயிரத்து, 464 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 776 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதில், மாலத்தீவு நாட்டில் இருந்து வந்த ஒருவர்; மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்த வந்த, 76 பேர்; கேரளா, டில்லி, மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து வந்த, தலா,ஒருவரும் அடங்குவர். மாநிலம் முழுதும் இதுவரை, 3.72 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு, 13 ஆயிரத்து, 967 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 66 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதன் வாயிலாக, அதிக பட்ச பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சிகிச்சை முடிந்து, நேற்று மட்டும், 400 பேர் வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை, 6,282 பேர் குணமடைந்துள்ளனர்.சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 62 வயது நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 50 வயது நபர், 19ம் தேதி உயிரிழந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 58 வயது பெண், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த, சென்னையைச் சேர்ந்த, 60 வயது நபர்; 47 வயது நபர்; 60 வயது நபர் மற்றும் 80 வயது நபர்ஆகியோரும் உயிரிழந்து உள்ளனர்.உயிரிழந்த ஏழு பேரில், ஆறு பேருக்கு, நீரிழிவு நோய் இருந்தது. மேலும், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு ஆகியவையும் இருந்தன. மொத்தம், 94 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் உயிர் இழப்புகளை, 0.7 என்ற அளவிலேயே, தமிழகம் கட்டுப்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்துவது, அரசுக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, புதிதாக தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்ட, ஈரோடு, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தோர், பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்புகின்றனர். அவர்களுக்கு, பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மேலும், ஒரே விமானத்தில் பல மணி நேரம் பயணித்து வந்தவர்களில், நான்கு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு, தற்போது தொற்று இல்லையென்றாலும், சில நாட்களில் கண்டறியப்படலாம். விமான நிலையத்தில், முதலில் பரிசோதனையில் தொற்று கண்டறியப்படாத, 25 பேர் வீடு திரும்பிய நிலையில், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, தமிழகம் வருவதற்கு, 19 ஆயிரம் பேர் அனுமதி பெற்றுள்ளனர். பல மாநிலங்களில் இருந்து, சாலை வழியாக வருவோர் அனைவரையும் பரிசோதித்து வருகிறோம். இதுபோன்ற சூழல், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது, புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் இருந்து, அரசு வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் / நேற்று முன்தினம் / நேற்று /குணம் அடைந்தோர் / இறப்புஅரியலுார் 355 355 348 0செங்கல்பட்டு 621 655 233 5சென்னை 8,228 8,795 3,048 65கோவை 146 146 144 1கடலுார் 420 421 401 1தர்மபுரி 5 5 4 0திண்டுக்கல் 127 132 106 1ஈரோடு 70 70 69 1கள்ளக்குறிச்சி 112 120 58 0காஞ்சிபுரம் 223 236 129 1கன்னியாகுமரி 49 49 23 1கரூர் 79 80 55 0கிருஷ்ணகிரி 21 21 18 0மதுரை 172 191 109 2நாகை 51 51 45 0நாமக்கல் 77 77 77 0நீலகிரி 14 14 12 0பெரம்பலுார் 139 139 113 0புதுக்கோட்டை 12 15 7 0ராமநாதபுரம் 39 39 21 1ராணிப்பேட்டை 84 88 60 0சேலம் 49 49 35 0சிவகங்கை 27 29 13 0தென்காசி 75 83 50 0தஞ்சாவூர் 76 80 66 0தேனி 92 96 44 1திருப்பத்துார் 29 30 26 0திருவள்ளூர் 594 636 215 8திருவண்ணாமலை 166 171 62 0திருவாரூர் 32 32 32 0துாத்துக்குடி 113 135 29 2திருநெல்வேலி 242 253 88 1திருப்பூர் 114 114 114 0திருச்சி 68 68 66 0வேலுார் 34 35 28 1விழுப்புரம் 318 322 294 2விருதுநகர் 61 69 40 0வெளிநாட்டில் இருந்து வந்தோர் 54 61 0 0ரயிலில் இருந்து வந்தோர் 3 5 0 0மொத்தம் 13,191 13,967 6,282 94மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம் நேற்று குணம் மாவட்டம் முன்தினம் நேற்று அடைந் இறப்பு தோர்அரியலுார் 355 355 348 0செங்கல்பட்டு 621 655 233 5சென்னை 8,228 8,795 3,048 65கோவை 146 146 144 1கடலுார் 420 421 401 1தர்மபுரி 5 5 4 0திண்டுக்கல் 127 132 106 1ஈரோடு 70 70 69 1கள்ளக்குறிச்சி 112 120 58 0காஞ்சிபுரம் 223 236 129 1கன்னியாகுமரி 49 49 23 1கரூர் 79 80 55 0கிருஷ்ணகிரி 21 21 18 0மதுரை 172 191 109 2நாகை 51 51 45 0நாமக்கல் 77 77 77 0நீலகிரி 14 14 12 0பெரம்பலுார் 139 139 113 0புதுக்கோட்டை 12 15 7 0ராமநாதபுரம் 39 39 21 1ராணிப்பேட்டை 84 88 60 0சேலம் 49 49 35 0சிவகங்கை 27 29 13 0தென்காசி 75 83 50 0தஞ்சாவூர் 76 80 66 0தேனி 92 96 44 1திருப்பத்துார் 29 30 26 0திருவள்ளூர் 594 636 215 8திருவண்ணாமலை 166 171 62 0திருவாரூர் 32 32 32 0துாத்துக்குடி 113 135 29 2திருநெல்வேலி 242 253 88 1திருப்பூர் 114 114 114 0திருச்சி 68 68 66 0வேலுார் 34 35 28 1விழுப்புரம் 318 322 294 2விருதுநகர் 61 69 40 0வெளிநாட்டில்இருந்து வந்தோர் 54 61 0 0ரயிலில் இருந்துவந்தோர் 3 5 0 0மொத்தம் 13,191 13,967 6,282 94

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-மே-202016:19:36 IST Report Abuse
Girija இன்னிக்கு எவ்வளவு தொற்று? நீ ஐநூறுக்கு மேல ஆயிரத்துக்குள் நம்பர் ஒன்னு சொல்லு எழுநூற்றி நுப்பத்தி(முப்பத்தி ) மூணு . தமிழு தமிழு அருவி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X