நாகர்கோவில் : சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொலை செய்து, துாக்கில் தொங்க விட்ட வழக்கில், மனைவி, அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, நித்திரவிளை புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜாஸ்பின், 30. இவர், சென்னையில் கல்லுாரியில் படித்த போது, ஆர்.கே. நகர் கார்கி, 35, என்பவரை காதலித்து, திருமணம் செய்தார். 9 - 4 வயதில், இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும், குமரி மாவட்டம் வந்து, துாத்துரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றனர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, கார்கி, வீட்டில் துாக்கில் சடலமாக தொங்கினார்.நித்திரவிளை போலீசார் விசாரணையில், ஜாஸ்பின் கூறியதாவது:சென்னையில் இருந்து வந்த பின், பல பெண்களுடன் நீண்ட நேரம் பேசுவார். கேட்டால் தகராறு செய்வார்.
சம்பவத்தன்று அலைபேசியில் ஆபாச படம் பார்த்தார். இதை தட்டிக் கேட்ட, என்னை தாக்கினார்.இது பற்றி என் தந்தை, ஜாய்பாய், 56, சகோதரர் ஜஸ்டஸ், 34, ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் வந்து கேட்ட போது, தகராறில் ஈடுபட்ட கார்கியை தாக்கினர். இதில் அவர் இறந்தார். தற்கொலை என நாடகமாட, துாக்கில் தொங்க விட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE