பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவச்செலவுக்கு பணம் வழங்க அனுமதி

Added : மே 22, 2020
Share
Advertisement

தேனி:மாவட்டம் தோறும் முன்னாள் ராணுவத்தினர் சிகிச்சை பெற மத்திய அரசின் இ.சி.எச்.எஸ். மருத்துவமனைகள் உள்ளன.

ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதய நோய்களுக்கு தினமும் மாத்திரை எடுத்து கொள்வர். இவர்கள் ஊரடங்கால் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாது. இவர்களின் நலன் கருதி இரு மாதங்களுக்கான மாத்திரை பில் தொகை அரசு வழங்குகிறது.

தேனி இ.சி.எச்.எஸ்., கிளினிக் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு கூறுகையில் '' தேனி மாவட்டத்தில் 16 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் சிகிச்சை பெறுகின்றனர். அவசர கேஸ்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊரடங்கால் வயதானவர்கள் டாக்டர் ஆலோசனை பெற 'வாட்ஸ் ஆப்' குரூப் துவங்கி மருந்து ,மாத்திரை பரிந்துரைக்கிறோம்.

ஏப்ரல், மே மாத மாத்திரை பெறுவோர் அருகில் உள்ள கடைகளில் வாங்கி அதற்கான பில் சமர்ப்பித்தால் அத் தொகை வழங்கப்படும். பில்கள் மே 31க்கு முந்தைய தேதிகளில் பெற்று ஜூன் 15ம் தேதிக்கு பிறகு பாலி கிளினிக்கில் வழங்கலாம் ,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X