மதுரை,மதுரையிலிருந்து நேற்று 1600 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் பீகார் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டனர்.ஊரடங்கால் மதுரையில் வேலைவாய்ப்பை இழந்த வடமாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். நேற்று பீகாரை சேர்ந்த 1,144 பேர், ராமநாதபுரத்தில் பணிபுரிந்த 456 பேரை மதுரை ரயில்வே ஸ்டேஷனில் கலெக்டர் வினய் நிவாரண பொருட்களை வழங்கி வழியனுப்பினார்.ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் லலித் மன்சுகானி, மூத்த வணிக மேலாளர் பிரசன்னா, வணிக மேலாளர் பரத், டி.ஆர்.ஓ.,க்கள் செல்வராஜ், கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், ஆர்.டி.ஓ.,க்கள் முருகானந்தம், சவுந்தர்யா, கண்ணகி, ஸ்டேஷன் இயக்குனர் சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கலெக்டர், ''சில நாட்களுக்கு முன் 66 பேர் உ.பி., 90 பேர் மே.வங்கம், 30 பேர் மேகாலயா, மிசோரமிற்கு சென்னை வழியாக அனுப்பப்பட்டனர். சொந்த மாநிலங்களுக்கு செல்ல 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். படிப்படியாக அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE