ஆத்துார் : ஆத்துாரில், இரு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி, 24 மணி நேரத்தில் இறந்தது.
சேலம் மாவட்டம், ஆத்துார், விதைப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 40; விவசாயியான இவரது பசு மாடு ஒன்று, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, கன்று ஈன முடியாமல் இருந்தது. கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன், பரிசோதனை செய்தபோது, இரு தலையுடன் கன்று உள்ளது தெரிந்தது. மருத்துவர், இரண்டு மணி நேரம் போராடி, கன்றுக்குட்டியை வெளியே எடுத்தார்.கன்றுக்குட்டிக்கு, இரு தலை, நான்கு கண்கள், இரு காதுகள் இருந்தன. அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஆனால், 24 மணி நேரமே உயிருடன் இருந்த கன்றுக்குட்டி, நேற்று மதியம், 12:00 மணிக்கு உயிரிழந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE