அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலை அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலை அகற்றம்

Added : மே 22, 2020
Share

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். நேற்று இங்கு பஸ் ஸ்டாப் அருகே தங்கள் முன்னோரான தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை நிறுவி வழிபாடு செய்தனர்.

அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அப்புறப்படுத்த போலீசார், வருவாய்த்துறையினர் வலியுறுத்தினர்.பொதுமக்கள் ஒத்துக்கொள்ளாமல் அமர்ந்து தர்ணாாவில் ஈடுபட்டனர். வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி.க்கள் சீனிவாசன்(ஆண்டிபட்டி), முத்துக்குமார்(தேனி), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குணசேகரன், ' ஊரடங்கு முடிந்தபின் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று சிலையை வைத்துக்கொள்ளலாம் ,'என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சிலையை அப்புறப்படுத்தி அருகில் உள்ள வீட்டில் வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X