சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே மேம்பாலத்தில், திக்... திக்...!

Added : மே 22, 2020
Share
Advertisement
 ரயில்வே மேம்பாலத்தில், திக்... திக்...!

திருப்பூர்:ரயில்வே மேம்பாலத்தில் ஐந்தடி உயர சுவர் இடிந்து விழுந்து, விபத்து ஏற்படுத்த காத்திருக்கிறது.திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் முக்கிய சந்திப்பாக ரயில்வே மேம்பாலம் உள்ளது. தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இப்பாலத்தை கடந்து செல்கின்றன. பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர், ஐந்தடி உயரத்துக்கு இடிந்து விழுந்துள்ளது.
பாலத்தின் கிழே அபாயகரமாக, 25 ஆயிரம் 'வாட்ஸ்' மின்சாரம் பாயும் உயரழுத்த மின்கம்பிகள், ரயில் தண்டவாளம் உள்ளது. எட்டி பார்த்தாலே பதைபதைக்கும் இந்த பாலத்தில், ஐந்தடி உயரத்துக்கு சுவர் உடைந்துள்ளது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.போக்குவரத்து போலீசார் தற்காலிகமாக 'பேரிகார்டு' வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும், விபத்து ஏற்படும் அபாயத்துக்கு வாய்ப்பு இருப்பதால் உடனடியாக இப்பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X