பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:மாநில இளைஞர் விருதுக்கு தகுதியானவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி அறிக்கை:சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்க, 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று மாநில இளைஞர் விருது முதல்வரால் வழங்கப்படும். 15 வயது முதல், 35 வயதுடைய தலா மூன்று ஆண் மற்றும் பெண்ணுக்கு இந்த விருது, 50 ஆயிரம் ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரத்துடன் வழங்கப்படுகிறது.விண்ணப்பிப்பவர் நடப்பாண்டு ஏப்., 1 அன்று, 15 வயது நிரம்பியவராகவும், மார்ச், 31 அன்று, 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கடந்த, 2019 நிதியாண்டில்மேற்கொள்ளப்பட்ட சேவை கருத்தில் கொள்ளப்படும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருது விண்ணப்பிக்க முடியாது. சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளம் www.sdat.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன், 30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X