பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சலக வங்கி  கணக்கு: நலவாரியம் 'அட்வைஸ்'

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:தொழிலாளர்கள், தபால் அலுவலகம் மூலம், வங்கி கணக்கு துவங்க, நலவாரியம் அறிவுறுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி, தமிழக அரசால், எவ்வித கட்டணமும் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.ஏற்கனவே பதிவு பெற்ற, புதுப்பித்தல் உள்ளவர்கள், கொரோனா உதவித்தொகை பெற, வங்கி கணக்கு இல்லையெனில், உடனடியாக அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று, நலவாரிய அட்டை, ஆதார், மொபைல் எண் வழங்கி, நலவாரிய அஞ்சலக கணக்கு துவங்கிக்கொள்ளலாம். தொழிலாளர்கள், போலிநபர்களிடம் பணத்தை பறிகொடுத்து ஏமாற வேண்டாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X