பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாவட்டத்தில் சிக்கிய  ஆசிரியர்கள்: பட்டியல் தயாரிக்கும் கல்வித்துறை

Added : மே 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள ஆசிரியர்களின் விவரங்களை கல்வித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 விடுபட்ட தேர்வுகள் அனைத்தும் ஜூன் 15 முதல் துவங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு

திருப்பூர்:வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள ஆசிரியர்களின் விவரங்களை கல்வித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 விடுபட்ட தேர்வுகள் அனைத்தும் ஜூன் 15 முதல் துவங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தற்போது தேர்வு மையம் மற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வுப்பணிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் பாடவாரியாக சேகரிக்கப்படுகிறது. இவர்களில் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் உள்ளவர்களின் விவரங்களும் திரட்டப்படுகின்றன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், '' பெரும்பாலான ஆசிரியர்கள் சொந்த ஊர்களில் உள்ளதாக தகவல் கிடைத்தது. அவர்களை தொடர்புகொண்டு பணிக்கு திரும்பு வதில் உள்ள சிரமங்களை கேட்டறிந்து வருகிறோம். 'இ-பாஸ்' பெறும் நடைமுறைகளை கூறுகிறோம். வரும், 27 முதல் விடைத்தாள் திருத்தம் மேற்கொள்படுவதால், 26ம் தேதிக்குள் திருப்பூர் மாவட்டத்திற்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X