பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் குறைவாக அரசு பஸ்கள் இயக்கம்

Added : மே 22, 2020
Share
Advertisement

மூணாறு:மூணாறில் கேரள அரசு பஸ் டெப்போவில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

கேரளாவில் கொரோனா ஊரடங்கின் நான்காம் கட்டத்தில் பல்வேறு விலக்குகள் அளிக்கப் பட்டதால், மாவட்டம் அளவில் மட்டும் நேற்று முன்தினம் முதல்பஸ்கள் இயக்கப்படுகின்றன. முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பஸ்சில் 25 பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதற்கு ஏற்ப பஸ் கட்டணம் 40 சதவீதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது.மூணாறில் உள்ள கேரளா அரசு பஸ் டெப்போவில் இருந்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், கேரளாவுக்குள்ளும் மொத்தம் 29 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.4 லட்சம் வருவாய் கிடைத் தது.

நேற்று முன்தினம் நான்கு வழித்தடங்களில் இயக்கப்பட்டதில், ரூ. 15,154 வருவாய் கிடைத்தது. நேற்று இடுக்கி,கட்டப்பனை, மறையூர், அடிமாலி, தேவிகுளம் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டவற்றில் பயணிகளும் மிக குறைவாகவே இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X