விவசாயிகளுக்கு மேலாண்மை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மேலாண்மை

Added : மே 22, 2020
Share

மேலுார், மேலுார் விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையத்தில் ஜூனில் நடக்கும் பயிற்சி முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என வேளாண்மை துணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.இம்முகாமில் நீர் மேலாண்மை பயிற்சிகள், விவசாய தொழில் நுட்பங்களான ஒருங்கிணைந்த பண்ணையம், பூச்சி மேலாண்மை, மண்வள அட்டையின் பயன்கள், மண் மாதிரி சேகரித்தல், வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், காளான், தேனீ வளர்ப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு பயிற்சி நிலையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X