ஆதார் மையங்கள் செயல்பட தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆதார்' மையங்கள் செயல்பட தயார்

Added : மே 22, 2020
Share

திருப்பூர்:நாடு முழுதும் 'ஆதார்' சேவை மையங்கள் அனைத்தும், முழுமையாகச் செயல்படுவதற்குத் தயாராகியுள்ளன.ஊரடங்கு காலத்தில், 'ஆதார்' சேவை மையங்கள் முடங்கியிருந்தன. கடந்த 17ம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அனைத்து 'ஆதார்' சேவை மையங்களும் முழுமையாகச் செயல்பட தயாராகியுள்ளதாக, தனிநபர் பிரத்யேக அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.'ஆதார்' செயலி அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தி, சேவை மையத்திற்கு, தங்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில், செல்ல முடியும். சேவை மையத்தின் உள்ளேயும், வெளியேயும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த மாதம், 'ஆதார்' தகவலில் திருத்தம் அல்லது மேம்படுத்திக்கொள்வதற்காக, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத்துறை சார்பில் செயல்படும், 20 ஆயிரம் பொது சேவை மையங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டது. இவற்றின் மூலம், கிராமப்புற மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X