பெருங்குடி, ''கோடை காலத்தில்தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க மே 25 முதல் 28 வரை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.மதுரை பெருங்குடிதனியார் கல்லுாரியில் தற்காலிக மல்லிகை பூ மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:ஊரடங்கில் வேளாண்மைக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் காய்கறிகள், பழங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைந்தது. விவசாயிகளும் நன்மை அடைந்தனர்.திருப்பரங்குன்றம், சோழவந்தானில் மல்லிகை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கில் மல்லிகை விவசாயிகளை பாதுகாக்க 3 மாவட்டங்களை ஒருங்கிணைத்து நறுமண தொழிற்சாலைக்கு மல்லிகை பூ அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் 10 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். சோழவந்தான் பகுதியில் அதிகமாக விளையும் தேங்காய்களை வெளிமாநிலங்களுக்கு தடையின்றி கொண்டு செல்ல முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டார், என்றார்.கலெக்டர் வினய், டி.ஆர்.ஓ., செல்வராஜ், ஆர்.டி.ஓ., சவுந்தர்யா, வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன், வேளாண் விற்பனை துணை இயக்குனர் விஜயலட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் புஷ்பலதா, புவனேஸ்வரி, தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE