காய்கறி லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்கறி லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share

சேலம் : பெங்களூரில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் அதை கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

பெங்களூரில் இருந்து மதுரைக்கு, அழுகிய காய்கறிகளுக்குள் மறைத்து, குட்கா கடத்தப்படுவதாக, சேலம் குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்திலுக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.தனிப்படை போலீசார், கருப்பூர் சுங்கச்சாவடி அருகே, சோதனையில் ஈடுபட்டனர். நிற்காமல் சென்ற ஒரு லாரியை துரத்தி, கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே மடக்கினர். லாரியின் கிளீனர் தப்பிய நிலையில், டிரைவர் ஜம்பு, 40, என்பவரை கைது செய்தனர். லாரியில், அழுகிய காய்கறிகளுக்குள், 24 மூட்டைகளில், குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருந்தன.

இவற்றின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்.துணை கமிஷனர் செந்தில் கூறுகையில், ''லாரி உரிமையாளர் பிரகாஷிடம் விசாரணை நடக்க உள்ளது. விசாரணையில், குட்கா கடத்தலில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X