பொட்டாஷ் உரம் மூடைக்கு ரூ.75 விலை குறைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொட்டாஷ் உரம் மூடைக்கு ரூ.75 விலை குறைப்பு 

Added : மே 22, 2020
Share

திண்டுக்கல்:'திண்டுக்கல்லில் பொட்டாஷ் உரம் மூடைக்கு ரூ.75 விலை குறைக்கப்பட்டுள்ளது' என, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தார்.

பயிர்களின் வளர்ச்சிக்கு பொட்டாஷ் உரம் அத்தியாவசியமானது. இது பயிர்களில் ஊட்டச்சத்தை பாதுகாத்து வறட்சியை தாங்கும் சக்தியை தருகிறது. பயிரில் புரோட்டீன், சர்க்கரை உற்பத்திக்கு உதவுகிறது. இதனை இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

கூட்டுறவு மற்றும் உர விற்பனை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறது. கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பயன் பெற பொட்டாஷ் உரம் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளது.அதனால் மூடைக்கு ரூ.950 க்கு விற்ற உரம், ரூ.75 குறைந்து ரூ.875 க்கு விற்கப்படுகிறது. உரம் தேவைப்படும் விவசாயிகள் உரக்கடைகளில் வாங்கி கொள்ளலாம். உரம் வாங்க ஆதார் அவசியம் என, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X