திருப்பூர்:அதிகளவிலான வெளி மாநிலத்தினர் உள்ளிட் டோர் வந்து செல்வதால், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அருகேயுள்ள வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு பணி தொடர்ந்து நடக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி அனைத்து வார்டிலும், இரு மாதமாக கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக, கிருமிநாசினி தெளிப்பு பல்வேறு உபகரணங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து பெருமளவு மாநகராட்சி பகுதி மீண்டுள்ளது. தற்போது இது பச்சை மண்டலமாக மாறியுள்ளது.
இச்சூழலில், திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய வட மாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல துவங்கியுள்ளனர்.இதனால், கடந்த சில நாட்களாக ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாப், ஜெய்வாபாய் பள்ளி வீதி மற்றும் அருகாமையில் உள்ள நேரு வீதி, டவுன்ஹால் மற்றும் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது. எனவே, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடர்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE