பொது செய்தி

தமிழ்நாடு

அறிவித்துள்ள கடன் திட்டங்களை செயல்படுத்துவது எப்போது?

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:மத்திய அரசு அறிவித்த கடன்களை வங்கிகள் விரைந்து வழங்கவேண்டும் என்பது, திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் படிப்படியாக மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன.உற்பத்தியை துவக்க, ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை தயாரிப்பு, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு, அதிகளவு நிதி தேவைப்படுகிறது. ஆனால், வங்கிகளோ, அரசு திட்டங்கள் குறித்த எவ்வித அறிவிப்பும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என கூறி, கைவிரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, 'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:அரசு அறிவித்துள்ள கடன் திட்டங்களே, தொழில் துறையினருக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால், வங்கிகளோ, அரசு அறிவித்துள்ள கடன் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவராமல், காலம் தாழ்த்துகின்றன. கடன் கேட்டு வருேவாரை, சிறப்பு கடன் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று கூறி திரும்பி அனுப்பிவிடுகின்றன.
இதனால், புதிய ஆர்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. வங்கிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி, கடன் உதவிகள் தொழில்முனைவோருக்கு விரைந்து கிடைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.நிறுவனங்களுக்கு, 50 சதவீதம் கூடுதல் கடன் வழங்கவேண்டும். அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே சீரான வட்டிக்கு கடன் வழங்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

விரைவில் வழங்கப்படும்

மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, ''அரசு அறிவித்துள்ள கடன் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, ஒவ்வொரு வங்கி நிர்வாகமும், வழிகாட்டுதல் அறிக்கை தயாரித்து அளிக்கவேண்டும்.வங்கி கம்ப்யூட்டர்களில் பிரத்யேக மாற்றங்கள் செய்யப்படும். அதனால்தான், தாமதம் ஏற்படுகிறது.பெரும்பாலான வங்கிகள், அடிப்படை பணிகளை நிறைவு செய்துவிட்டன. சில கடன் வழங்க துவங்கி விட்டன. ஓரிரு நாட்களில், அனைத்து வங்கியிலும், கடன்கள் வழங்கும் பணி துவங்கி விடும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X