காளான் விற்பனை குறைந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காளான் விற்பனை குறைந்தது

Added : மே 22, 2020
Share
திண்டுக்கல்: ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை காளான் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி பகுதியில் செயற்கை பட்டன் காளான் உற்பத்தி செய்து மதுரை, கோவைக்கு அனுப்புகின்றனர்.தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் காளான் விற்பனை குறைந்தும், வெளியூர்களுக்கு பட்டன் காளானை அனுப்புவதும்

திண்டுக்கல்: ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை காளான் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி பகுதியில் செயற்கை பட்டன் காளான் உற்பத்தி செய்து மதுரை, கோவைக்கு அனுப்புகின்றனர்.தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் காளான் விற்பனை குறைந்தும், வெளியூர்களுக்கு பட்டன் காளானை அனுப்புவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரூ.40க்கு விற்ற 200கிராம் காளான், ரூ.35ஆகவும், ரூ.45க்கு விற்ற டப்பா ரூ.40ஆகவும் விலை குறைந்துள்ளது. இதனால் அதிக லாபம் எதிர்பார்த்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் வியாபாரி ஒருவர் கூறியதாவது: பட்டன் காளானில் பிரியாணி, சுக்கா, சாப்ஸ், கிரேவி, காளான் 65, சூப் தயாரிக்கின்றனர். இறைச்சிக்கு இணையாக இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவதால், சாதாரண நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 200 கிலோ பட்டன் காளான் வந்தது. தற்போது ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டத்திற்கு, குறிப்பாக சென்னைக்கு அனுப்புவது குறைந்துள்ளது. தற்போது திண்டுக்கல்லுக்கு 500 கிலோ பட்டன் காளான் வருவதால் விலை குறைந்துள்ளது. ஊட்டி மார்க்கெட் விலைக்கு கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், என்றார்.-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X