பொது செய்தி

தமிழ்நாடு

'வெளியூர்' ஆசிரியர்களின் விவரம் சேகரிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருக்கும் ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பிளஸ் 1 ல் இறுதி தேர்வு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனது. மீண்டும் ஜூன் 15 முதல் 30 வரை பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு நடக்க உள்ளது.

இதையொட்டி தேர்வு பணிக்காக முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரடங்கால் ஆசிரியர்கள் பலரும் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப முடியாமல் இருக்கின்றனர். அவர்களை பணிபுரியும் மாவட்டத்திற்கு அழைத்து வர அரசு திட்டமிட்டுள்ளது.

அதனால் திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், வத்தலக்குண்டு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, வெளியூரில் இருக்கும் ஆசிரியர்களின் பெயர், ஊர் விவரங்களை சேகரிக்கும் பணி நடக் கிறது. அதனடிப்படையில் அவர்களுக்கு 'இ- பாஸ்' வழங்கி ஜூன் 10 க்குள் பணிக்கு வர வசதி செய்யப்பட்டுள்ளது என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X