பொது செய்தி

தமிழ்நாடு

7 மையங்களில் மே 27முதல் விடைத்தாள் திருத்தும் பணி * மே 27 முதல் நடக்கிறது

Added : மே 22, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வை 20 ஆயிரத்து 500 மாணவர்கள், பிளஸ் 1 தேர்வை 21 ஆயிரத்து 600 மாணவர்கள் எழுதியுள்ளனர்.

கொரோனா காரணமாக பிளஸ் 1 இறுதி தேர்வு மட்டும் நடக்கவில்லை.ஊரடங்கால் ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது 60 நாட்களுக்கு பிறகு மே 27 ல் நடக்க உள்ளது. அதனால் மே 26 ல் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் ஒரு முதன்மை மையம், 2 துணை மையம், ஒட்டன்சத்திரத்தில் ஒரு முதன்மை மையம், 3 துணை மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்க உள்ளது. ஒரு அறையில் 10 ஆசிரியர்கள் வீதம் விடைத்தாள் திருத்த உள்ளனர். ஆசிரியர்கள் காலை 8:00 மணிக்கு மையங்களுக்கு வர வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பணிதுவங்கும் முன் கிருமிநாசினியால் கைகளை கழுவ வேண்டும்.விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு எந்த காரணத்திற்காகவும் விலக்கு அளிக்கப்படாது. அலுவலக பணியாளர்கள், மதிப்பெண் சரிபார்ப்பாளர் மற்றும் அட்டவணையாளர் மே 22 முதல், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மே 27 முதல், உதவி தேர்வாளர்கள் மே 28 முதல் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பணிக்கு வர வேண்டும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X