ஆட்டோ தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

Added : மே 22, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பால்ராஜ், செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.ஆட்டோ தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி சிரமப்படுகின்றனர். நலவாரியம் மூலம் 10 சதவீதம் பேருக்குதான் ரூ. 2ஆயிரம் நிவாரணம் கிடைத்துள்ளது.

////////////////////////////////எனவே அனைவருக்கும் நிவாரணமாக ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள், அவசரத் தேவைக்காக செல்லும் ஆட்டோக்களையும் பிடித்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். எனவே, ஆட்டோ ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X