கைத்தறி நெசவு கூலி குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைத்தறி நெசவு கூலி குறைப்பு

Added : மே 22, 2020
Share

அன்னுார்: கைத்தறி, பட்டு, கோரா சேலைகளுக்கான நெசவு கூலியை, ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்திருப்பதாகவும், இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், அன்னுார் கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்அன்னுார்: குன்னத்தூர்புதூர், நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ஆசிரியர்கள் சார்பில், 100 மாணவ மாணவியருக்கு, 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ், துணை தலைவர் மூர்த்தி, தலைமை ஆசிரியர் சாந்திரஞ்ஜனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அ.ம.மு.க., உதவி சிறுமுகை: காரமடை கிழக்கு ஒன்றியம், இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். புங்கம்பாளையத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகிகள் ஏழை, எளிய, 250 குடும்பங்களுக்கு காய்கறி வழங்கினர்.கிரஷர் உரிமையாளர் உதவிகாரமடை: காரமடை மங்கலக்கரை புதுாரில் உள்ள வெங்கடேஸ்வரா புளூ மெட்டல்ஸ் கிரஷர் உரிமையாளர் நந்தகுமார், சுற்றுப்பகுதியில், 15 கிராமங்களில் உள்ள, 4000 குடும்பங்களுக்கு, அத்தியாவசிய நிவாரண பொருட்களை, வழங்கி வருகிறார்.தீவிரவாத எதிர்ப்பு தினம்அன்னுார்: கைகாட்டியில், காங்கிரஸ் சார்பில், தீவிரவாத எதிர்ப்பு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படத்துக்கு, மாலை அணிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகர காங்., தலைவர் அப்துல் கரீம், வட்டார தலைவர் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்வேல் பங்கேற்றனர்.நடுநிலைப்பள்ளியில் நிவாரணம்அன்னுார்: அ.மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சார்பில் 87 மாணவருக்கு, தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவர் பொன்னுசாமி, தலைமையாசிரியர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.ரஜினி மக்கள் மன்றம் உதவிஅன்னுார்: ரஜினி மக்கள் மன்றத்தின், மாவட்ட இணை செயலாளர் சண்முகசுந்தரம் சார்பில், அன்னுாரில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் உதவிகாரமடை: மருதூர் ஊராட்சியில் உள்ள, செல்லப்பனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஜாக்குலின் மேரி, உதவி ஆசிரியை கவிதா ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.சாணாம்பாளையத்தில் நிவாரணம்அன்னுார்: சாணாம்பாளையம், சாலைபாளையத்தில், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார், 100 பேருக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் பானுமதி ரவி, கனகராஜ் பங்கேற்றனர்.காலனியில் 200 பேருக்கு உதவிஅன்னுார் : பேரூராட்சியில், கவுண்டம்பாளையம் காலனியில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அமுல் கந்தசாமி, 200 பேருக்கு, அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். அ.தி.மு.க., நகர செயலாளர் சவுகத் அலி, ஒன்றிய கவுன்சிலர் திலகவதி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X