தண்ணீர் திருட்டால் செயற்கை தட்டுப்பாடு: கணக்கம்பாளையம் மக்கள் குற்றச்சாட்டு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் திருட்டால் செயற்கை தட்டுப்பாடு: கணக்கம்பாளையம் மக்கள் குற்றச்சாட்டு

Added : மே 22, 2020
Share
திருப்பூர்:பிரதான குடிநீர் குழாயில் இருந்து, மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து, கணக்கம்பாளையம் ஊராட்சியில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது கணக்கம்பாளையம். இந்த ஊராட்சிக்கு செல்லும் பிரதான குழாயில் இருந்து, மாநகராட்சியின் வெங்கமேடு பகுதிக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. குடிநீர்

திருப்பூர்:பிரதான குடிநீர் குழாயில் இருந்து, மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து, கணக்கம்பாளையம் ஊராட்சியில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது கணக்கம்பாளையம். இந்த ஊராட்சிக்கு செல்லும் பிரதான குழாயில் இருந்து, மாநகராட்சியின் வெங்கமேடு பகுதிக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியமும் கண்டுகொள்ளவில்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், வேறு வழியின்றி, கூடுதல் விலைக்கு தண்ணீர் வாங்கி சப்ளை செய்யப்படுகிறது.கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், ஆத்துப்பாளையம் பம்ப் ஹவுஸ் பகுதியில் இருந்து, பூலுவபட்டிக்கு மீண்டும் குழாய் பதித்து, தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், உரிய தண்ணீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:ஊராட்சிக்கு குடிநீர் வருவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி பகுதிக்குள் குழாய் பதித்து தண்ணீர் எடுக்கின்றனர். மக்களுக்காக, மூன்றாவது திட்டத்தில், தினமும் ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீரை, கூடுதல் விலைக்கு வாங்கி வினியோகிக்கிறோம்.தற்போது, சிலர் ஆங்காங்கே தண்ணீரை குழாய் பதித்து எடுக்கின்றனர். இதனால், கணக்கம்பாளையத்துக்கு, தினமும், 5.40 லட்சம் லிட்டர் வர வேண்டிய நிலையில், இரண்டு லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே கிடைக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X