பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்

Added : மே 22, 2020
Share
Advertisement
 திண்டுக்கல்லில் தவிக்கும்  வடமாநில தொழிலாளர்கள்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பலர் இ பாஸ் கிடைத்தும் ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நுாற்பாலைகள், ஓட்டல்களில் வெளிமாநிலத்தவர் பணிபுரிகின்றனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர் செல்ல அரசு ஏற்பாடு செய்கிறது.நேற்றுமுன்தினம் பீகார் மாநில தொழிலாளர்கள் 1,339 பேர் சிறப்பு ரயிலில் சென்றனர்.மேலும் சில மாநில தொழிலாளர்கள் தவிப்பதாக தகவல் கிடைத்தது.

இதுபற்றிய விவரம் வருமாறு:திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் பணியாற்றும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மாநில தொழிலாளர்கள் அம்மாநிலத்தில் 'இ பாஸ்' பெற்று சிறப்பு ரயிலுக்காக காத்திருக்கின்றனர். கடந்த 50 நாட்களுக்கு மேலாக உணவு உட்பட எவ்வித வசதியுமின்றி சிரமப்படுவதாக கூறினர்.

அதிகாரிகள் உதவ வேண்டும்

ராஜஸ்தான் தொழிலாளர்கள் ரபீக், ஹன்ஸ்ராஜ் கூறியதாவது: எங்கள் மாநிலத்தில் இருந்து இ பாஸ் மெயிலில் வந்துள்ளது. அதில் மே 23 வரை ஊர் திரும்ப அனுமதித்துள்ளனர். இங்கு எப்போது ரயில் வரும் என தெரியவில்லை. இ பாஸ் வாங்கியுள்ளதால் வேலைக்கும் செல்ல முடியாது.விரைவில் ரயிலில் அனுப்ப அதிகாரிகள் உதவ வேண்டும், என்றனர்.

திண்டுக்கல் ஆர்.டி.ஓ., உஷா கூறியதாவது: மாவட்டத்தில் அதிகமாக இருந்த பீகார் மாநில தொழிலாளர்களை சிறப்பு ரயிலில் அனுப்பி வைத்துள்ளோம். இதேபோல மற்ற மாநில தொழிலாளர்களையும் கணக்கெடுத்துள்ளனர். அவர்களுக்கான சிறப்பு ரயில் குறித்து முதல்நாள் தான் தகவல் வரும். ஜூன் 1 முதல் ரயில் சேவை துவங்க உள்ளதால் இ பாஸ் காலக்கெடு முடிந்தாலும் கவலைப்பட தேவையில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X