நடக்க முடியலையா... நாங்க இருக்கோம்! ஆர்.பி.எப்., வீரர்களின் மகத்தான பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடக்க முடியலையா... நாங்க இருக்கோம்! ஆர்.பி.எப்., வீரர்களின் மகத்தான பணி

Added : மே 22, 2020
Share
கோவை:ரயில் ஏற சிரமப்படும் பயணிகளை, கொரோனாவையும் பொருட்படுத்தாது, 'வீல் சேர்', 'ஸ்டிரக்ச்சர்' உதவியுடன், ரயிலில் ஏற்றும் மகத்தான பணிகளை, ஆர்.பி.எப்., வீரர்கள் செய்துவருகின்றனர்.ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல், தவிக்கும் வடமாநிலத்தவர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை ரயில்வே ஸ்டேஷனில் சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள், வயதானோர் பிளாட்பார்ம் செல்ல முடியாமல், சிரமப்படுவதை காணமுடிகிறது.நோய் பரவலை தவிர்க்க, சமூக இடைவெளியே தீர்வு என அறிவுறுத்தப்படுகிறது. இச்சூழலில், ரயில் ஏற முடியாதவர்களுக்கு, 'வீல் சேர்', 'ஸ்டிரக்சர்' உதவியுடன், துாக்கி செல்லும் மகத்தான பணியில், ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் இருந்து, நேற்று முன்தினம் பீகார் புறப்பட தயாராக இருந்த ரயிலில், செல்வதற்காக நடக்க முடியாத நிலையில், பெண் ஒருவர் ஸ்டேஷனுக்கு வந்தார்.அவரை பார்த்த ஆர்.பி.எப்., வீரர்கள், வீல் சேரில் துாக்கி சென்று, ரயிலில் ஏற்றினர். அப்பெண் இரு கரம் கூப்பி, வணங்கி சென்றது, காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X