பொது செய்தி

தமிழ்நாடு

அலகுமலை குடிநீர் பிரச்னை: கலெக்டரிடம் மக்கள் மனு

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:அலகுமலையில் இருந்து புதிய குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கினால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமென, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அலகுமலை ஊராட்சிக்கு உட்பட்ட, அலகுமலையில், 140 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த, நான்கு ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றோம். அத்திக்கடவு திட்ட குடிநீர், எங்கள் பகுதிக்கு வருவதே இல்லை.கடந்த ஐந்து மாதங்களாக, பாதியளவு மட்டும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, குடிநீரை விலைக்கு வாங்குவதால், வாரம், 1000 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு இணைப்பு வழங்க சிலர் முயற்சி எடுத்துள்ளனர்.இதுகுறித்து, அலகுமலையை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து, புதிய குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கினால், மீண்டும் பற்றாக்குறை உருவாகும். மாவட்ட நிர்வாகம், புதிய குடியிருப்பு பகுதியில், மேல்நிலைத்தொட்டி, போர்வெல் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆழ்குழாய் கிணறு அமைக்க உதவிட வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X