பொது செய்தி

தமிழ்நாடு

பொட்டாஷ் உரம் விலை குறைப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:ஊரடங்கு உத்தரவால் விவசாயிகளுக்கு, பொட்டாஷ் உரம் விலை குறைக்கப்பட்டுள்ளது.மக்காச்சோளம், கரும்பு, பாக்கு, வாழை, தென்னை, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு, முக்கிய இடுபொருளாக பொட்டாஷ் உரம் பயன்படுகிறது.ஊரடங்கு அமலில் இருப்பதால், விவசாயிகளுக்கு இந்த உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போது கோடை உழவு நடந்து வருவதால், விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.நேற்று முதல் பொட்டாஷ் உரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. மூட்டை, 950 ரூபாய்க்கு விற்ற பொட்டாஷ் உரம், இன்று முதல், 75 ரூபாய் குறைத்து, 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கோவை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X