குடிநீர் வினியோக பாதிப்பால் தனியார் விற்பனை மும்முரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வினியோக பாதிப்பால் தனியார் விற்பனை மும்முரம்

Added : மே 22, 2020
Share

சின்னாளபட்டி:'செட்டியபட்டியில் குடிநீர் வினியோகம் பாதித்துள்ள நிலையில், விதிமீறிய தனியார் விற்பனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஊராட்சி தலைவர் ராஜா தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன் வரை, கிராம ஊராட்சிகள் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், வணிக நிறுவன அனுமதி, கட்டடம், வரைபட அனுமதி, தனியார் தண்ணீர் விற்பனை தொடர்பான விதிமீறல்கள் அதிகரித் தன. ஆத்துார் ஒன்றியத்தின் பல கிராமங்களில், இப்பிரச்னைகளால் குடிநீர், மின் வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் பாதித்துள்ளன.

.புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் இவற்றை பட்டியலிட்டு தீர்வு காணும் முயற்சியை துவக்கி உள்ளனர். செட்டியபட்டியில் தண்ணீர் வினியோக பாதிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி தலைவர் ராஜா கூறுகையில், ''வீட்டுக்கென வரைபட அனுமதி பெற்று, வணிக நிறுவனம் நடத்துகின்றனர். அனுமதியின்றி தனியார் தண்ணீர் விற்பனைக்காக, கட்டுப்பாடின்றி நீர் எடுக்கின்றனர்.பொது வினியோகம் பாதித்துள்ளது. வளர்ச்சித்துறை அதிகாரிகள் உதவியுடன் விரைவில் தீர்வு காணப்படும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X