பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

Added : மே 22, 2020
Share
Advertisement
 நிலக்கடலை சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

அவிநாசி:அவிநாசியில், நிலக்கடலை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.அவிநாசி, சேவூர் சுற்றுப்புற பகுதிகளில், நிலக்கடலை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பொதுவாக, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், நிலக்கடலை சீசன் களைகட்டும். அவிநாசி சுற்றுப்புறப் பகுதிகளில், கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால், நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்தனர்.இன்னும், ஓரிரு நாட்கள் மழை பெய்யும்பட்சத்தில், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடத்துவங்குவர். சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதி திங்கள் தோறும் நிலக்கடலை ஏலம் நடத்தப்படுவது வழக்கம். ஊரடங்கு விதி அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 18ம் தேதிக்கு பின், நிலக்கடலை ஏலம் நடக்கவில்லை.ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில், குறைந்தளவு நிலக்கடலை மட்டுமே, இருப்பில் இருந்தது. போக்குவரத்து முடங்கியதால் விவசாயிகள் அவற்றை எடுத்துச் செல்லவில்லை. ஊரடங்கில், தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், குடோனில் உள்ள நிலக்கடலையை விதைக்காக விவசாயிகள் எடுத்துச் செல்ல துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X