கூட்டுறவு நிர்வாகத்தில் பாரபட்சமா இரு மாதங்களாக நெசவாளர் அதிருப்தி

Added : மே 22, 2020
Share
Advertisement
சின்னாளபட்டி:கூட்டுறவு அலுவலர்களின் பாரபட்சத்தால் நெசவாளர்கள் 2 மாதங்களாக அதிருப்தியில் உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 140 க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். நிர்வாகத்தின் பாரபட்சத்தால் 2 மாதங்களாக வருவாய் பாதித்ததாக புலம்புகின்றனர்.நெசவாளர்கள் கூறியதாவது: சங்க அலுவலர்கள் சிலர் தனியாரைக் கொண்டு

சின்னாளபட்டி:கூட்டுறவு அலுவலர்களின் பாரபட்சத்தால் நெசவாளர்கள் 2 மாதங்களாக அதிருப்தியில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 140 க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். நிர்வாகத்தின் பாரபட்சத்தால் 2 மாதங்களாக வருவாய் பாதித்ததாக புலம்புகின்றனர்.நெசவாளர்கள் கூறியதாவது: சங்க அலுவலர்கள் சிலர் தனியாரைக் கொண்டு நெசவுப்பணியில் ஈடுபடுகின்றனர்.

ஊரடங்கின்போது 2 வாகனங்களில் சிறப்பு அனுமதி மூலம் தனியாருக்கு நுால்பாவு வழங்கினர். சங்கத்தின் மீது நம்பிக்கை குறைந்துள்ளது. நிவாரணமும் பலருக்கு கிடைக்கவில்லை, என்றனர்.

கைத்தறி துணிநுால் துறை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறுகையில், ''தனியாரின் செயல்பாடுகளை கணக்கில் கொள்ள முடியாது. சங்க உறுப்பினர்களுக்கு, காஞ்சிபுரம், கோவையில் இருந்து பாவு வாங்கி வந்து தரவேண்டியுள்ளது. பஸ் போக்குவரத்து துவங்கினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

நலவாரியத்தின் 4 4,676 உறுப்பினர்களில், 3,600 பேருக்கு நிவாரணம் வந்துள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் கிடைக்கும். பதிவு செய்யாதவர்களுக்கு பட்டியல் தயாரிப்பு குறித்த நெறிமுறைகள் அரசிடம் இருந்து வரவில்லை'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X