பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு மாத விடுமுறைக்கு பின், பருத்தி ஏலம்

Added : மே 22, 2020
Share
Advertisement

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ஊரடங்கு உத்தரவால், கடந்த மார்ச், 18ம் தேதிக்கு பின், பருத்தி ஏலம் நடத்தப்படவில்லை. இரண்டு மாத விடுமுறைக்கு பின், பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம், 241 மூட்டை பருத்தி வரத்தாக இருந்தது. இதில், ஆர்.சி.எச்., ரகம், 4,000 முதல், 4,360 ரூபாய், கொட்டு ரகம், 1,500 முதல், 2,500 ரூபாய் வரை விற்கப்பட்டது. 2.59 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.மகளிர் குழுவினர், பெண்கள், சிறு வியாபாரி கள், சிறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, தவணை முறையில் திருப்பி செலுத்துகின்றனர். மூன்று மாதங்களுக்கு தவணை செலுத்த நிர்பந்தம் செய்யக்கூடாது என, மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், நிதி நிறுவனங்கள், வட்டி விதிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட வேலம்பாளையம் பெண்கள், கலெக்டரிடம் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் தெரிவித்தார்.ஊரடங்கு காரணமாக, வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக, வாகன போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால், மீண்டும் விபத்துகள் ஏற்படும் என்பதால், ஹெல்மெட் அணியும்படி வாகன ஓட்டிகளை வலியுறுத்தப்படுகிறது. அவ்வகையில், பல்லடம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், வாகன சோதனை நடத்தும் போலீசார், 'ஹெல்மெட்' அணிய அறிவுறுத்துகின்றனர்.வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதார நிலைய கட்டடம் கட்டி, 37 ஆண்டு ஆகிறது. இதனால், கட்டடம் பலவீனமாக உள்ளது. தினமும், 700க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக, அதிகாரிகள், இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, கட்டடம் இடியும் முன், உடனடியாக துரிதமான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர், வெள்ளியங்காட்டில், குரங்கு ஒன்று, சுற்றித் திரிந்தது. தண்ணீர் மற்றும் உணவைத் தேடி அலைந்த இந்த குரங்கு, வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தது. அவ்வப்போது, வீடுகளுக்குள் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்றதால், பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. தகவலறிந்த வனத்துறையினர், குரங்கை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தினமும், 2.75 லட்சம் லிட்டர் ைஹபோகுளோரைடு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் வருகிறது. சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, குடியிருப்பு வீடுகள் தோறும், ைஹபோகுளோரைடு பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இரு மாதங்களாக, 165 கோடி லிட்டர் அளவில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு அடிக்கடி மாற்றப்படுவது, மாணவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. மாணவர் ஆசிரியர் நலன் கருதி கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் சரியாகும் வரை, பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வேண்டும். காலதாமதமாகும் பட்சத்தில் தேர்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.ஊத்துக்குளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அதில், செங்கப்பள்ளியில் சீட்டாட்டம் நடப்பது போலீசாருக்கு தெரிந்தது. இதுதொடர்பாக, குமார், 51, செல்வம், 51, வெங்கிடுசாமி, 43, துரையன், 50 மற்றும் செல்வம், 48 ஆகியோரை போலீசார் கைது செய்து, 42 ஆயிரத்து, 300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.வேளாண் துறையின் கீழ், 2020--21ம் ஆண்டுக்கான, நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் (எம்.எஸ்.டி.ஏ.,) திட்டத்தின் கீழ், கோடை உழவு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பல்லடம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், வேலம்பாளையம் கிராமங்களில், உழவு மானியமாக, ஏக்கருக்கு, 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இது குறித்து, வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், நலிவடைந்த தொழிலாளர்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி கொடுவாய் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், 100 பேருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கிளை தலைவர் ஜெகநாதன், செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் மூர்த்தி, துணை தலைவர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.காங்கயம், முள்ளிப்புரத்தில் சாராயம் காய்ச்சி விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை செய்தனர். அரசு கல்லுாரி அருகே டூவீலரில் வந்த, இருவரை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 40, அத்தான்வலசை சேர்ந்த சுப்ரமணி, 55 என்பது தெரிய வந்தது. இருவரையும் சாராயம் காய்ச்சியதாக கைது செய்த போலீசார், இரண்டு லிட்டர் சாராயம் மற்றும் 10 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X