சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு குறைந்ததால் வழிப்பறி திருடர்கள் 'ஆட்டம்'

Added : மே 22, 2020
Share
Advertisement

பல்லடம்:கண்காணிப்பு குறைந்துள்ளதால், பல்லடத்தில் வழிப்பறி திருடர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.பல்லடத்தை அடுத்த கரைப்புதுார், சின்னக்கரை பகுதியில், ஏராளமான தொழிலாளர்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்கு வரத்தும் அதிகம் உள்ள அப்பகுதியில், கடந்த, 19ம் தேதி மாலை, ஒருவரிடம், வழிப்பறி திருடர்கள், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன், பணம், நகை பறித்து வந்தனர். இதையறிந்த பொதுமக்கள் கேட்டதால், வழிப்பறி ஆசாமிகள் தப்பி ஓடினர்.அப்பகுதியினர் கூறியதாவது:கரைப்புதுார், சின்னகரை பகுதியில், சமீப நாட்களாக, வழிப்பறி ஆசாமிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக புகார் கூறினால், போலீசார் கண்டித்து அனுப்பி வைக்கின்றனர். இந்த சம்பவத்தின் போது, ஓடிச்சென்ற வழிப்பறி ஆசாமியிடமிருந்து, கத்தி கீழே விழுந்தது.பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், வழிப்பறி திருடர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே, திருட்டு குறையும். ஆனால், போலீசார் அவ்வாறு செய்வதில்லை. மேலோட்டமாக விசாரித்து, எச்சரித்து அனுப்புகின்றனர்.இதனால், திருடர்கள் மீண்டும், 'தொழிலில்' இறங்குகின்றனர். ஒருவேளை கைது செய்தாலும்கூட, திருடிய பணம் மற்றும் நகைகளை கொண்டு, ஜாமீனில் வெளியே வருகின்றனர்.எனவே, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வழிப்பறி திருடர்களை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X