பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பி.எப்., அலுவலகம் புதிய கட்டடத்துக்கு மாற்றம்

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம், வரும் ஜூன் 1ம் தேதி முதல், கலெக்டர் அலுவலம் எதிரே, புதிய கட்டடத்துக்கு இடம்மாற உள்ளது.திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம், திருப்பூர் - அவிநாசி ரோடு, காந்திநகரில் வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது. துவக்கத்தில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ஓர் ஆய்வாளர் அலுவலகமாகவே, திருப்பூர் இயங்கி வந்தது. கடந்த 2017ல், மாவட்ட பி.எப்., அலுவலக அந்தஸ்து பெற்றது; கமிஷனரும் நியமிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போதுள்ள சிறிய கட்டடம் போதுமானதாக இல்லை. இதனால், பல்லடம் ரோட்டில், கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்புறம், தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில், இரண்டாம் தளம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ம்தேதி முதல், இந்த புதிய இடத்துக்கு, மாவட்ட பி.எப்., அலுவலகத்தை இடம் மாற்ற முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X