ரேஷன் அரிசி கடத்தலா? தகவல் அளிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தலா? தகவல் அளிக்க அழைப்பு

Added : மே 22, 2020
Share

திருப்பூர்:'ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கினால் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்,' என்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக அரசால் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு, கொரோனா வைரஸ் முன்னிட்டு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இப்பொருட்களை அளவு குறைவாக வழங்குவது, பதுக்கி வைத்திருப்பது மற்றும் கடத்துதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும்.இதுதொடர்பான ஏதாவது புகார் இருந்தால், பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களது விபரங்கள் ரகசியம் காக்கப்படுவதுடன், தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்படும். தகவல் அளிக்க, 94981 - 79420, 94981 - 85760 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X