சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் பிரசவம் பார்த்த  108 ஆம்புலன்ஸ் ஊழியர்

Added : மே 22, 2020
Share
Advertisement
 வீட்டில் பிரசவம் பார்த்த  108 ஆம்புலன்ஸ் ஊழியர்

அன்னுார்:அன்னுார் அருகே கர்ப்பிணிக்கு, பிரசவ வலி அதிகமானதால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார்.அன்னுார், சத்தி ரோடு, இந்திரா நகர், தனியார் மில் வளாகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஈடல் அலி, 25, மனைவி மண்பூஸ்சாகத்துான், 20 மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசிக்கின்றனர். கர்ப்பிணியான மண்பூஸ்சாகத்துானுக்கு, நேற்றுமுன் தினம் மாலையில் வலி ஏற்பட்டது.போன் செய்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் வலி அதிகமானதால், அந்த வீட்டிலேயே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பாலாஜி, அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். நலமுடன் ஆண் குழந்தை பிறந்தது.தாய் மற்றும் குழந்தையை, அன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்து, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தை எடை குறைவாக இருந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.வீட்டில் பிரசவம் பார்த்த பாலாஜி மற்றும் உதவிய ஓட்டுனர் கிருஷ்ணராஜிற்கு, ஈடல் அலி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X